ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி; அதிபர் புடின் குற்றச்சாட்டு.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் எனவு, அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

பல மேற்கத்திய நாடுகளில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் போர் நீண்டு வருவதால், போரை நிறுத்த வேண்டும் என விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த போரால் இலங்கை நாடு திவாலாகிவிட்டது.

கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த 3ம் தேதி தெரிவித்தார். இந்தநிலையில் ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதையடுத்து 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளது.

ஜோசியக்காரரை பார்த்து விட்டுத்தான் Watch Bil தருவாரா…?

இந்தநிலையில் ரஷ்யாவின் துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாக அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகளை கடுமையாக முயற்சி செய்து வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் என்பது ரஷ்ய மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. வரலாற்று ரஷ்யா என்ற கருத்தில், உக்ரேனியர்களும் ரஷ்யர்களும் ஒரே மக்கள் தான்.

நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் ஷேர் பண்ணா கிரிமினல் வழக்கு; நெட்ஃபிளிக்ஸ் அதிரடி.!

பிரித்து வெற்றிகொள், அதைத்தான் மேற்கத்திய நாடுகள் எப்பொழுதும் சாதிக்க முற்படுகிறார்கள், இன்னும் செய்ய முயல்கிறார்கள். ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது. ரஷ்ய மக்களை ஒன்றிணைப்பதே எங்களின் நோக்கம். எங்களுடைய அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நவீன வான் பாதுகாப்பு அமைப்பை 100 சதவீதம் அழிப்போம்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.