வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற இளைஞர்! உடலுக்குள் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள்


இந்தியாவில் இளைஞர் உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டுள்ள விடயம் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

வயிற்று வலி

ஜார்க்கண்ட்டின் குட்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்ற நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.

வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற இளைஞர்! உடலுக்குள் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் | Teen Age Man Stomach Pain Shocked Find

thehindu

பெண் இனப்பெருக்க உறுப்புகள்

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டு உள்ளன. கருப்பை, அதற்கான குழல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளன.
இதையறிந்து இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி டாக்டர் தாரா சங்கர் ஜா கூறும்போது, கோடிக்கணக்கானோரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படும். அறுவை சிகிச்சையில் அவரின் அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளும் உடலில் இருந்து நீக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.