கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையத்தில், வெள்ளம் தற்போது வடிந்துள்ளது.
ரயில் நிலைய பகுதியை துப்புரவு செய்யயும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல பகுதிகளில் நீர் வடிந்துள்ளதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலையகத்தின் சில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் இடிமின்னலுடன் மழை பெய்வருகிறது..