ஸ்பெயினில், 65 அடி உயர பாலத்திலிருந்து, ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்.
இரவு வேளையில், 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி அந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில், மழை பெய்ததன் காரணமாக, சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால், பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, ஆற்றுக்குள் பாய்ந்தது. ஓட்டுநர் உள்பட 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், 3 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. கனமழையைத் தொடர்ந்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மீட்பு பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது.