கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் பென்சப்பள்ளி எனும் கிராமத்தில் ஓட்டுநராக சந்தோஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓசூரில் உள்ள காரப்பள்ளி பகுதியில் வசித்து வருகின்ற 17 வயது பள்ளி சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
அந்த சிறுமியை தொடர்ந்து வற்புறுத்தி தன்னை காதலிக்க வைத்துள்ளார். மேலும், ஆசை வார்த்தைகளை கூறி கடந்த ஆறு மாத காலமாக சந்தோஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இது பற்றி அந்த சிறுமியின் உறவினர்களுக்கு தெரிய வர அவர்கள் உடனடியாக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.