ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
அதுபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புகள் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியது.
அந்த அறிவிப்பில் அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பணமும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக தெரிவித்து இருந்தது.
இத்தகைய நிலையில், இதற்கான தேதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் டிசம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விநியோகம் செய்யப்பட இருக்கின்றது.
இதையடுத்து ஜனவரி 2-ல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கின்றார். டோக்கன் கொடுத்து ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைரேகை பதிவு செய்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.