அதிகமாக காபி அருந்துவதால் இதயநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம், மருத்துவ ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!

தினந்தோறும் இரண்டு கப் காஃபி அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காஃபி அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு காஃபியின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்று தெளிவுப்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் இயக்குனர் ஹிரோயாசு ஐசோ தனது ஆய்வில் விளக்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.