அம்பாறை மாவட்டத்தில் இன்று (26) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் சாகாமம் பிரதேசத்தில் 49.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தீகவாபி பிரதேசத்தில் 38.2 மில்லிமீற்றரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 35.4 மில்லிமீற்றரும், எக்கல் ஓயா பிரதேசத்தில் 26.0 மில்லிமீற்றரும், லகுகல பிரதேசத்தில் 22.5 மில்லிமீற்றரும், இங்கினியாகல நீர்ப்பாசனக் குளத்தில் 15.2 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமை நேரப் பொறுப்பதிகாரி ஏ.எஸ். சாதிக் தெரிவித்துள்ளார்.
மாலை வேளையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லாதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது.