கன்னியாகுமரி : தேசியக் கல்விக் கொள்கை 2022 யை நடைமுறைப்படுத்துவதன் ஒரு மைல் கல்லாகத் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் மாநில திறந்த நிலைப்பள்ளிகளின் தேசியக் கருத்தரங்கு நடந்தது. தேசிய திறந்த நிலைப் பள்ளிகளுக்கான நிறுவனத்தின் (என்ஐஓஎஸ்) தலைவர் பேராசியர் டாக்டர் சரோஜ் சர்மாவின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த கருத்தரங்கு நடந்தது.
என்ஐஓஎஸ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் இயங்குகிறது. இது மறுக்கப்பட்டோருக்கும் வாய்ப்பினை வழங்க விரிவாகப் பணியாற்றும் உலகின் மிகப்பெரிய திறந்த நிலைப் பள்ளிகளுக்கான அமைப்பாகும். இந்த கருத்தரங்கில் புதுவையின் முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி, விவேகானந்தா கேந்திரா கிழக்குப்பகுதி தலைவர் லட்சுமி நாராயன் பாணிகிரகி, மாவட்ட கலெக்டர் அரவிந்த், இந்திய உணவுக்கழக தனி இயக்குநர் டாக்டர் தெய்வ பிரகாஷ், விவேகானந்தா கேந்திரா பொதுச்செயலாளர் பாணுதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து ெகாண்டனர்.
அனைத்து என்ஐஓஎஸ் இன் தலைவர்களும், அலுவலர்களும், நாட்டின் பல்வேறு மாநில திறந்த நிலைப் பள்ளிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், ஊடகத்தினரும், சென்னை வட்டார மைய அலுவலர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
திறந்தநிலை, தொலை நிலைக் கல்வியின் பரவலுக்காக என்ஐஓஎஸ் மாநில திறந்த நிலைப் பள்ளிகளும் திறன் வாய்ந்த வகையில் ஒருங்கிணைந்து எஸ்ஓஎஸ் அமைப்பை நிறுவி வலுப்படுத்துவது, அவர்களது பொறுப்பாளர்களுக்குத் திறன் மேம்பாடும் புதிய எஸ்ஓஎஸ் உருவாக்க வழிகாட்டுவது, திறந்த நிலைக்கல்விக்கான தரத்தை உறுதிப்படுத்துவது, வளங்களைப் பகிர்வதற்கான திட்டமிடுவது, திறன் வாய்ந்த ஒத்துழைப்பு ஆகியவை இந்த தேசியக் கருத்தரங்கின் மையப்பொருளாகும்.
இதன் வாயிலாகக் கல்வி மறுக்கப்பட்ட இடைநிற்கும் குழந்தைகளின் கல்வியைப் பொதுக்கல்விக்காக நாடுமுழுவதும் கல்வி ஒலியைப் பரப்புவதற்கான வாய்பை இது வழங்குகிறது.
கல்விக் கொள்கை இந்த இரண்டு நாட்களும் குறிப்பிடத்தக்க ஆலோசனைகளை, தேசியக் 2020யை நடைமுறைப் படுத்துவதற்காக வழங்கப்படும் தளமாக அமைவதோடு, பல பரிமாண தாக்கத்தையும் ஏற்படுத்தும் என என்ஐஓஎஸ் நிர்வாகிகள் கூறினர்.