கமல்ஹாசனுடன் நடிகை நதியா நடித்ததே இல்லை! ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பலரும் கொண்டாடும் ஒரு முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன், இவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று இந்த காலத்து நாயகிகள் கூட ஏங்குகின்றனர்.  இந்த வயதிலும் இவருடன் நடிக்க இவ்வளவு பேர் ஆசைப்படும் நிலையில், இளம்வயதில் இவர் நடித்தபோது எத்தனை பேர் இவருடன் நடிக்க ஆசைப்பட்டிருப்பார்கள்.  பல முன்னணி நடிகைகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர், ஆனால் அப்போது முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருந்த நடிகை நதியா மட்டும் இவரோடு இதுவரை ஒரு படம் கூட நடித்ததில்லை என்பது ஆச்சர்யமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது.  80-களில் தனது நடிப்பாலும், அம்சமான அழகாலும் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் தான் நதியா.  இவருக்கு ஜீரோ ஹேட்டர்ஸ் என்று தான் சொல்லலாம், அந்தளவுக்கு இவருக்கு தமிழிலும், மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

அந்த காலத்தில் நதியாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரசிகைகள் பலரும் நதியா ஹேர்ஸ்டைல், நதியா மூக்குத்தி என ஃபாலோ செய்ய தொடங்கினர்.  80-களில் மட்டும் தான் இவர் பிரபலமா என்றால் நிச்சயம் இல்லை, இப்போதும் இவருக்கு ரசிகர்களின் மனதில் உள்ள இடம் அப்படியே தான் இருக்கிறது.  திருமணத்திற்கு பிறகு ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் மூலம் ஜெயம் ரவிக்கு அம்மாவாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.  அப்போது எப்படி இருந்தாரோ அதே ஸ்டைலுடனும் அழகுடனும் தான் இன்னும் இருக்கிறார், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழித்திரைப்படங்களிலும் கொடிகட்டி பறந்த நதியா ஏன் கலஹாசனுடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதற்கான கேள்வி தற்போது கிடைத்துள்ளது.

சமீபத்தில் நதியா அளித்த பேட்டியொன்றில், அவரிடம் கமல்ஹாசனுடன் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்ப்பட்டது.  அதற்கு பதிலளித்தவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.  மேலும் பேசியவர் தான் கமலுடன் நடிக்க முடியாமல் போனதற்கு ஒரே காரணம் கால்ஷீட் பிரச்சனை தான்.  அவர் படத்தில் நடிக்க என்னை அணுகும்போதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகியிருப்பேன், ‘விக்ரம்’ படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான் தான்.  ஆனால் அந்த சமயத்தில் நான் நிறைய பாடங்களில் கமிட் ஆகியிருந்தால் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தமாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.