அனர்த்தம் மற்றும் கடும் மழையினால் எதிர்பார்க்கப்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள பால் வார்த்த ஓடை தோண்டப்படட்டுள்ளது..
சனிக்கிழமை(24) இரவு பெய்த இடி மின்னலுடனான கடும் மழையை அடுத்து, காத்தான்குடி கடற் கரையிலுள்ள பால் வார்த்த ஓடை (25) ஞாயிற்றுக்கிழமை தோண்டப்பட்டது.
புதிய காத்தான்குடி பகுதியில் வழமையாக தொடர் மழை பெய்யுமாயின் வீடுகளும், வீதிகளும் வெள்ளத்தால் நிரம்பி பாதிக்கப்படும். தற்போத சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பெய்து வரும் மழையால் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் வெள்ள அபாயத்தை தடுக்கும் என்பதினால் இந்த பால் வார்த்த ஓடை தோண்டப்பட்டது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எம். அஸ்பரின் ஆலோசனைக்கேற்ப நகர சபை ஊழியர்களினால் இப்பால் வார்த்த ஓடை தோண்டப்பட்டது
வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளம் வடிந்து ஓடும் வகையில் இந்த பால்வார்த்த ஓடை தோண்டப்பட்டுள்ளது.
M M Fathima Nasriya