புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்கள் நினைவிடங்களில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நுழைந்தது. பண்டிகை காலம் என்பதால் ஒரு வார ஒய்வுக்கு பின் இந்த யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி நேற்று தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். முதலில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன் பின் முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, வாஜ்பாய் ஆகியோரது நினைவிடங்களில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார்.