கொடைக்கானல்: கொடைகானலிலிருந்து வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலையில் ராட்சதமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலின் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதிகாலையில் பலத்த காற்று வீசியதில் கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலையில் பூலத்தூர் அருகே பெரிய மரம் முறிந்து விழுந்தது இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் சாலையில் கிடந்த மரத்தை அகற்றினர். இதனை அடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு கொடைக்கானல் வத்தலகுண்டு பாதையில் போக்குவரத்து சீரானது. மரத்தை அகற்றி போக்குவரத்துக்கு சீரானபின்னர் அந்த பாதையில் காத்திருந்த பயணிகளும், பொதுமக்களும் நிம்மதியடைத்தனர்.