வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில் வேகமாக பரவியுள்ள கோவிட் வைரஸ் பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சடலங்களை எரிக்க மயானங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியதையடுத்து அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தால் அரசு பணிந்தது. கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கோவிட் பரவல் உச்சத்தை தொட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
![]() |
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதி மற்றும் பணியாளர்கள் இன்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன. தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்காக வருவதாக தெரிகிறது. கடந்த வாரத்தில் , ஒரே நாளில் 3.7 கோடி பேர் உருமாறிய கோவிட்டால் பாதிக்கப்படுவார்கள் என சீன சுகாதாரத்துறை கணித்துள்ளது.
இந்நிலையில் கோவிட் தொற்று பாதிப்புடன், உள்ளூர் மருத்துமனைகள் மக்கள் நிரம்பி விட்டதால் கோவிட் தடுப்பு மாத்திரையை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வைரஸ் பாதிப்பால் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்திருக்கலாம் எனவும், இறந்தவர்களை எரிக்க மயானங்களில் நீண்ட வரிசையில் சடலங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாடு டி.வி. செய்தி நிறுவனங்கள் செய்தியுடன் வீடியோ வெளியிட்டுள்ளன. தவிர கொரோனாவுக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துகொண்டிருக்கலாம்’ என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement