தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவில் ராம்குமார் -மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.
இதுதொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும், முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் ஆகியோர் இந்த பிரச்னை தொடர்பாக ராம்குமார் மற்றும் மாரியம்மாளை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.