தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு : 1000 ரூபாய்க்கு எப்போது டோக்கன்?

Tamilnadu Pongal Package : தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. கடந்தாண்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால், அதில் பல பொருள்கள் தரமற்றதாக இருந்ததாகவும், குறைவான பொருள்கள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

எனவே, இம்முறை கடந்த முறை போல் இல்லாமல் சீராக பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பை மொத்தம் 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் ஒரே சீரில் கொடுக்க டோக்கன் முறையை அரசு பின்பற்றி வருகிறது. அதாவது ஒரே சமயத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து சிரமம் விளைவிப்பதை தவிர்க்க இந்த டோக்கன் முறை பயனுள்ளதாக இருக்கிறது. 

இந்நிலையில், பொங்கல் தொகுப்புக்கு உரியவர்களான ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, ஒரே நாளுக்கு அந்த பகுதியை பொறுத்து 100இல் இருந்து 200 டோக்கன்கள் வரை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிரது. 

அந்த டோக்கனில் ரேஷன் கார்டு உள்ள தெரு, ரேஷன் எந்த தேதியில் பொருள்களை பெறுவது ஆகிய விவரங்கள் அந்த டோக்கனில் இடம்பெற்றிருக்கும். எனவே, நாளையும் (டிச. 27), நாளை மறுதினமும் (டிச. 28) பொங்கல் தொகுப்புகளுக்கு டோக்கன்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ரேஷன் பொருள்களை நேரடியாக வீட்டுகே வந்து விநியோகம் செய்ய வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்புகள் இந்த பொங்கல் தொகுப்பையொட்டியும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.