சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி செட்டி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று இரவு திருச்செந்தூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் இருந்த கயல்விழி என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.