பிரித்தானியாவில் கேரள பெண், 2 குழந்தைகள் கொலை! கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்.. முக்கிய தகவல்


பிரித்தானியாவில் கேரளப்பெண்ணையும் அவரின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அவரின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

3 பேர் கொலை

Ketteringல் கடந்த 15ஆம் திகதி அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான சாஜு (52) கைது செய்யப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் மூவரும் மூச்சுத் திணறலால் இறந்தது தெரியவந்தது. அதாவது கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கேரள பெண், 2 குழந்தைகள் கொலை! கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்.. முக்கிய தகவல் | Man Appears At Crown Court Nurse And Children

PA/Special arrangement

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த நிலையில் சமீபத்தில் சாஜு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நார்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜராகி அவர் பேசினார்.

இதன்பிறகு மார்ச் 24ஆம் திகதி அன்று அவர் மீதான விசாரணை நடக்கவுள்ளது.
அதுவரையில் சாஜு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.