மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு கூறல் அனுஷ்டிக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியாகின்றதை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஈகை சுடர் ஏற்றி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மேலாதி அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .