புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
63 வயதான நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.