ராகுல் காந்தியின் பேச்சு பூகம்பத்தை ஏற்படுத்துகிறது; முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்

குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘ நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன.

இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர்.

நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. யாத்திரையில் ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார். சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார்.

ட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் – கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்’’ என முதல்வர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.