சென்னை: நேருவின் வாரிசு ராகுல் பேசுவது கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும் என காங்கிரஸ் துணைத்தலைவர் கோபன்னாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு என்ற நூல் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோபண்ணாவின் பேத்தி ஆதியா, முதல்வரிடம் நூலைக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, […]
