ஸ்கை டைவிங் செய்து வானில் புரோமோசன்! டிச.31 ”துணிவு நாள்” என லைகா மாஸ் அறிவிப்பு!

லைகா நிறுவனம் வெளிநாடுகளில் துணிவு படத்திற்கான ஓவர்சீஸ்கான வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

வாரிசு-துணிவு என்று தென்னிந்தியாவின் இருபெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது, திரையுலகம் மற்றும் ரசிகர்களிடையே தீவிர எதிர்ப்பார்ப்பிற்குள் தள்ளி உள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களை புரோமோசன் செய்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இரண்டு படங்களின் பாடல்களுமே போட்டியாக மாறியுள்ளன!

image

வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி இணையதளங்களை கலக்கி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடல்களை டிரெண்ட் செய்து வருகின்றனர். வாரிசு படத்தின் தீ இது தளபதி பாடல் வெளியாகி டிரெண்ட் ஆன போது, போட்டியாக சில்லா சில்லா பாடல் வெளியாகி இணையத்தை டிரெண்டிங்கில் வைத்திருந்தது, ரஞ்சிதமே, காசே தான் கடவுளடா, அம்மா பாடல், கேங்ஸ்டா பாடல் என அடுத்தடுத்து வெளியாகி படத்திற்கான முழு எதிர்ப்பார்ப்பையும் எகிர வைத்துள்ளது.

வானில் புதுமையாக புரோமோசன் முயற்சி!

வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடத்தப்பட்டு, விஜயின் செல்பி வீடியோ, குட்டி ஸ்டோரி என, அந்த ஒருநாள் இணையத்தையே ஆக்கிரமித்து இருந்தது விஜயின் வாரிசு.

image

இந்நிலையில், தற்போது அதற்கு போட்டியாக வானில் ஸ்கை டைவிங் செய்து, துணிவு படத்திற்கான புரோமோசனை நடத்தி உள்ளது லைகா நிறுவனம். மேலும் வெளியிட்டிருக்கும் முக்கிய அப்டேட்டாக டிசம்பர் 31ஆம் தேதி ”துணிவுநாளா” இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31-ஐ துணிவு நாள் என்று அழைக்கிறோம்!

புரோமோசனிற்கான வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது லைகா நிறுவனம், அந்த வீடியோவில் சாகசவீரர்கள் விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் அடித்து, துணிவு போஸ்டர் உள்ள துணியை பிடித்தவாறே பறக்கின்றனர். மேலும் ரெட் கலர் புகை விட்டபடியே அஜித் உருவம் பறக்கிறது.

image

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் அவர்கள் எழுதியிருப்பது, “ஏகே வழியில் செல்கிறோம், முதன்முறையாக கோலிவுட் படத்திற்கு இதுவரை பார்த்திராத அறிவிப்பு, 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதுப்பித்தலுடன் வரவிருக்கும் இந்த இடத்தைப் பாருங்கள், அந்த நாளை நாங்கள் #துணிவுநாள் என்கிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.