சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 2 ஆயிரம் ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், திமுகவினரே ஏரியா சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகர் புறங்களில் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் நகர்ப்புறங்களில் வார்டு குழு மற்றும் பகுதி சபை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் பகுதி சபை, நகராட்சிகளில் வார்டு குழு அமைக்கப்படுகிறது. […]
