Thunivu: துணிவு படத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் தான் துணிவு. நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.

முதல் இரண்டு படங்கள் வினோத்தின் ஸ்டைலில் இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இம்முறை துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் ஸ்டைலில் உருவாகியுள்ளதாம். சதுரங்கவேட்டை, தீரன் பட பாணியில் துணிவு படமும் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Vijay: என் GIRL FRIEND கூட அந்த படத்துக்கு போனேன்..விஜய் ஓபன் டாக்..!

மேலும் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே துணிவு படத்தின் மூலம் அதை சரிசெய்யும் முனைப்பில் படக்குழு இருக்கின்றது.

இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதே தினத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாவதால் கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக காணப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இதுவரை துணிவு படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் காங்ஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன.

இவை அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் இது தவிர இப்படத்தில் மேலும் ஒரு பாடல் இருப்பதாகவும், அது படத்தில் சர்ப்ரைஸாக வரும் என்றும் தகவல் வந்துள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அந்த பாடல் ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்ரைஸாக இருக்கும் என தெரிகின்றதாம். இந்த தகவலினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.