அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்..!

பலரும் கடந்த சில வருடமாக கொரோனா காலகட்டத்தில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை பயன்படுத்தி பண மோசடிகளும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்தி அரசாங்க துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

அந்த வகையில் யில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.12 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகளுக்கு வலைவீசி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்ட பகுதியில் வசிப்பவர்கள் சந்தோஷ் கண்ணன் மற்றும் ரேணுகாதேவி. இவர்கள் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் சலூன் கடையினை நடத்தி வருகின்றனர். 

இந்த தம்பதியிடம் பழகிய அனுசா என்ற பெண்ணொருவர் தனது தந்தை சிவகுமார் எனபவர் ரயில்வே துறையில் உயர் அதிகாரி என்று கூறியுள்ளார். இதனையடுத்து அனுசாவை முழுவதும் நம்பிய ரேணுகா தனது உறவினரான கற்பகம் என்கிறவருக்கு ரயில்வே துறையில் வேலைவாங்கித் தருமாறு ரூ.12 லட்சம் மற்றும் 10 சவரன் நகையை கொடுத்து ஏமாந்துள்ளார் என்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.