இதையெல்லாம் திருடுவாங்க..இரும்பு நடைபாதையை திருடும் கும்பல்: வீடியோ வைரல்

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ திருட்டு நிகழ்ச்சியை தொடர்புடையது, மேலும் இந்த காட்சிகளை பார்த்தால் நீங்களும் இப்படியெல்லாம் கூட திருடுவார்களா என்பீர்கள். வாருங்கள் என்னநடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்.

இந்த நிலையில் மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ரா பாளையம் உள்ளது. இப்பகுதி் முழுவதும் காலணி விற்பனை கடைகள் முழுவதுமாக காணப்படும். இதனிடையே ஆங்காங்கே சில குடியிருப்புகளும் இருந்துவருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இங்கு  நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிந்த இரும்பு நடைபாதையை இருவர் தூக்கி ட்ரை சைக்கிளில் எடுத்துக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது, மேலும் இதையெல்லாம் கூட திருடுவாங்கலா என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை இங்கே காணுங்கள்: 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.