இன்னும் சில வாரங்கள்தான்… பிரித்தானிய அரசு வழங்கும் உதவிகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?


பிரித்தானிய அரசு விலைவாசி உயர்வால் அவதியுறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நிதியுதவிகளை அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசின் குடும்பங்களுக்கு உதவும் நிதியுதவித் திட்டம்

அரசின் Household Support Fund என்னும் நிதியுதவியின் ஒரு பாகமாக, பிரித்தானியா முழுவதும் உள்ள கவுன்சில்கள் நிதியாகவும், பல்பொருள் அங்காடி வவுச்சர்களாகவும் இந்த உதவியை வழங்கி வருகின்றன.

400 பவுண்டுகள் வரை நிதியுதவி வரை வழங்கப்படும் நிலையில், இந்த நிதியுதவி நீங்கள் வாழும் இடத்தைப் பொருத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Guildford போன்ற இடங்களில் வாழும் மக்களுக்கு 400 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன. Shropshireஇல் வாழும் மக்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கப்படுகின்றன.

இன்னும் சில வாரங்கள்தான்... பிரித்தானிய அரசு வழங்கும் உதவிகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? | Cost Of Living

உடனே செயல்படுங்கள்

இந்த உதவி மட்டுமின்றி, சில பகுதிகளுக்கு ஆற்றல் தொடர்பிலான நிதி உதவியும் சில இடங்களில் வழங்கப்படுகின்றன. விடயம் என்னவென்றால், சில திட்டங்களுக்கு 2023 ஜனவரி 31தான் கடைசி நாள். 

ஆகவே, உடனடியாக செயல்பட்டு, நீங்கள் இந்த நிதி உதவி பெற தகுதியுடையவரானால், அதற்கான முயற்சிகளை துவங்குங்கள். 

மேலதிக தகவல்களுக்கு…



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.