இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள பலர் விண்ணப்பம்


இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக 5401 பேர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் 1621 பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள பலர் விண்ணப்பம் | Dual Citizenship Application

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள்

மேலும், சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் 382560 பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள பலர் விண்ணப்பம் | Dual Citizenship Application

கடந்த 2020ம் ஆண்டை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் கடவுச்சீட்டுக்கள் கடந்த 2021ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.