இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளியான காரணம்


நாட்டில் ஏறட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9,300 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள்  

கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர்.

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளியான காரணம் | Deficiency Child In Sri Lanka Economic Crisis

அந்த எண்ணிக்கை 1949 கொழும்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 1457 கர்ப்பிணித் தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளியான காரணம் | Deficiency Child In Sri Lanka Economic Crisis

உணவுப் பற்றாக்குறை

உணவுப் பற்றாக்குறையால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு படிப்படியாக உருவாகும் என்றும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது குழந்தைகளில் வளர்ச்சி குறைபாட்டை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. 

போசாக்கு நிலையை குறைப்பதற்காக இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு போசாக்கு பைகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.