வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக சுப்புராமன் (33) என்பவர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு அப்பகுதியில் தொடர்ந்து மிரட்டல் வந்ததன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் துறையினர் நேற்று முதல் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஊராட்சி தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
