எடப்பாடி எடுக்கும் முக்கிய முடிவு: டெல்லிக்கு ஷாக் கொடுக்க பிளான்!

அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில்

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கட்சி பொதுக்குழுவில் பெரும்பான்மையானோரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருந்த நிலையில் அதனாலே அவர் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ்ஸையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டனர். ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. தன் பக்கமும் ஆதரவாளர்கள் உள்ளனர். கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது என்பதை நிரூபிக்க

பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அண்மையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓபிஎஸ்ஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் நேற்று பதிலும் அளித்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறித்து விசாரித்தோம். மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஓபிஎஸ்ஸுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எப்படி பதிலடி கொடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்கிறார்கள்.

பாஜகவோ ஒன்றுபட்ட அதிமுக தான் பலம் என கருதுகிறதாம். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும். தினகரனை கூட்டணியிலாவது இணைக்க வேண்டும். என்பது தான் பாஜகவின் குரலாக உள்ளது.

இதில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சிறிதளவு கூட சம்மதம் இல்லை. சொல்லப்போனால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்தால்கூட நிம்மதி என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறாராம். பாஜகவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று வெளியேறிவிட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்தும் யோசித்து வருகிறார்களாம்.

இதனாலே சமீபத்தில் சி.வி.சண்முகம் மூலம் ஆழம் பார்த்தார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தால் கட்சியினர், பொது மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்று ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி எந்த பாதையில் பயணம் போகப்போகிறார் என்பதை இன்றைய கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஓரளவு கணிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.