சென்னை: ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே சிறந்த சேவை எனவும் தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
