பரேலி, உத்தர பிரதேசத்தில் கட்டாய மத மாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ராம்புர் மாவட்டத்தில் உள்ள சோனா கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின் போது, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சிலரை, கட்டாயப்படுத்தி கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் பாதிரியார் பால்ஸ் மாஷி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதேபோல் பல்லியா மாவட்டத்தின் திதௌலி கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் சிலரை, கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ராம் நிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், உத்தர பிரதேச அரசின் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும் விதிக்க வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement