கத்தார் உலகக்கோப்பைக்கு பின் முதல் கோல் அடித்த ஜேர்மன் வீரர்! செல்சி மிரட்டல் வெற்றி


இங்கிலிஷ் கால்பந்து தொடரில் செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போர்னேமவுத் அணியை வீழ்த்தியது.

மிரட்டிய ஹாவெர்ட்ஸ்

இங்கிலாந்தின் Stamford Bridge மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், செல்சி அணி வீரர்கள் துடுப்புடன் ஆட்டத்தை துவங்கினர்.

அவர்களின் வேகமான ஆட்டத்தின் மூலம் முதல் பாதியிலேயே செல்சி அணிக்கு 2 கோல்கள் கிடைத்தது.

ஜேர்மனின் கை ஹாவெர்ட்ஸ் 16வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

கை ஹாவெர்ட்ஸ்/Kai Havertz

@GETTY IMAGES/Marc Atkins

கத்தார் உலகக்கோப்பையில் கோஸ்டாரிகாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்த ஹாவெர்ட்ஸ், அதன் பின்னர் தனது முதல் கோலை இந்தப் போட்டியில் அடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து 24வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மேசன் மவுண்ட் கோல் அடித்தார். முதல் பாதியில் போர்னேமவுத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

மேசன் மவுண்ட்/Mason Mount

@Getty Images

செல்சி வெற்றி

இரண்டாம் பாதியில் போர்னேமவுத் அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் செல்சி அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

அதேபோல் செல்சியின் தடுப்பும் வலுவாக இருந்ததால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போர்னேமவுத் தோல்வியை தழுவியது.

செல்சி அணி இந்த வெற்றியுடன் 24 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.    

கை ஹாவெர்ட்ஸ்/Kai Havertz

@Getty

கத்தார் உலகக்கோப்பைக்கு பின் முதல் கோல் அடித்த ஜேர்மன் வீரர்! செல்சி மிரட்டல் வெற்றி | German Havertz Goal Vs Bournemouth For Chelsea

@John Walton/PA Media



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.