குமரி : திருவட்டார் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற நபர்.! மீட்பு பணியில் வீரர்கள்.!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால், தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது. 

அந்தவகையில், திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருந்தாலும் பலரும் அந்த ஆற்றில் குளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று திருவட்டார் கொற்றுபுத்தன் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் என்பவர் ஆற்றில் குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். 

அங்கு திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அந்த பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மதுசூதனன் நாயரை தேடியபோது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ளவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால், ஆற்றில் தண்ணீர் அளவு அதிகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.