கோவை: குறைந்த விலையில் தவணை முறையில் வீடுகட்டித் தருவதாக கூறி ரூ.2.97 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செல்வஜெயம் நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரனுக்கு ரூ.3.03 கோடி அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 65 முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேரை கோவை டான்பிட் நீதிமன்றம் விடுவித்தது.