சென்னை: கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும், மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முற்பகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், […]
