கொரோனா.. முதல்வர் அதிரடி உத்தரவு; அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

சீனா நாட்டின் உகான் நகரில் முதன்முதலில், கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்தது. 2 ஆண்டுகளை கடந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வந்தது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் பரவும் பி.எப்.7 எனப்படும், புதிய வகை கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கதிகலங்கி போய் கிடக்கின்றனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி விடுமோ? என்ற அச்சம் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு, மாநில அரசுகளை மத்திய சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளதால் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டு உள்ள பரபரப்பு தகவல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே காக்கா தோப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மாதத்திற்கு 2 முறை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் ஆகியோர் மாதந்தோறும் இப்பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி, உணவு கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தடுப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்.

குறிப்பாக, தமிழக முதல்வர் உத்தரவுபடி அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் இல்லாதவர்களுக்கு முக கவசம் வழங்குமாறு அந்தந்த சுற்றுலா தலங்களின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும்.

மேலும் சுற்றுலா பயணிகள் கிருமி நாசி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்படும். இவ்வாறு தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

புதிய வகை கொரோனா உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டு இருக்கும் தகவலை மக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.