அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங் காபாத் பாஜக தலைவர் ஷிரிஷ் போரல்கர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை போற்றும் விதமாக பூமியிலிருந்து 392.01 ஓளிஆண்டு தூரத்தில் ஒரு நட்சத்திரத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதற்காக சர்வதேச விண்வெளி அமைப்பில் பதிவு செய்தோம்.
இதற்கான பதிவு எண் சிஎக்ஸ்16408யுஎஸ் என்று தரப்பட்டுள்ளது. நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கான சர்வதேச விண்வெளி பதிவு சான்றிதழும் தரப்பட்டுள்ளது. இவ்வாறு ஷிரிஷ் போரல்கர் கூறினார்.