தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை போன்றவற்றை உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உண்டானது. பல அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழக அரசின் சொத்து வரி உயர்வை எதிர்த்து நூற்றிற்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த நிலையில் சென்னை, கோவை மாநகராட்சிகளின் சொத்து வரி உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த சொத்துவரி தொடர்பான அரசாணை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.