ஜனவரி 1ஆம் திகதி முதல்… வெளிநாட்டவர் வரி தொடர்பில் ஒரு முக்கிய ஒப்பந்தம்


இரண்டு ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், சுவிட்சர்லாந்தும் பிரான்சும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு மற்றொரு நாட்டில் பணியாற்றுவோருடைய வரி தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர் வரி தொடர்பில் ஒரு முக்கிய ஒப்பந்தம்

2023 ஜனவரி 1ஆம் திகதி முதல், ஒரு பணியாளர் தனது ஒரு ஆண்டு பணிக்காலத்தின் 40 சதவிகிதத்தை, வரி விதிப்பின் பாதிப்பு எதுவுமின்றி வீட்டிலிருந்தபடியே பணி செய்யலாம்.
எல்லை தாண்டி பணி செய்வோர், குறிப்பாக பிரான்சில் வாழ்ந்தவண்ணம் சுவிட்சர்லாந்தில் பணி செய்வோருக்கு சுவிட்சர்லாந்தில் வரி விதிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி பிரான்சுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 1ஆம் திகதி முதல்... வெளிநாட்டவர் வரி தொடர்பில் ஒரு முக்கிய ஒப்பந்தம் | Swiss Deal Reached On Taxing Remote Workers

 Itzhaki | Dreamstime.com

கோவிட் காலகட்டத்திற்குப் பின் வீட்டிலிருந்தபடி பணி செய்தல் வரி தொடர்பில் முக்கிய கேள்விகள் எழும்பக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், இந்த வாரம், சுவிட்சர்லாந்தும் பிரான்சும், வீட்டிலிருந்தபடி பணி செய்தல் எல்லை கடந்து பணி செய்தல் மீதோ, அதனுடன் தொடர்புடைய வருமான வரி மீதோ (அது 40 சதவிகித பணி மணி நேரங்களாக இருக்கும் பட்சத்தில்) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளன. 

புதிய விதிகள் அறிமுகம் எப்போது?

ஒப்பந்தம் உறுதியாவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், விதிகள் அறிமுகமாக சற்று தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், இந்த புதிய விதிகளை 2023ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து அறிமுகம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.