தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 10 நாட்களுக்கு தங்கத் தேர் உலா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவெம்பாவை விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் பவனி உலா நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை தங்கத் தேர் உலா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.