திருமணமான 2 மாதத்தில் சடலமான புதுப்பெண்! மரணத்தில் மர்மமா?


தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பெண் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அருண்குமார், சேலத்தை சேர்ந்த தனது உறவினர் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பெரிய கோமேஸ்வரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை மிருதுளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமான 2 மாதத்தில் சடலமான புதுப்பெண்! மரணத்தில் மர்மமா? | Tamilnadu Young Women Died Suicide

விசாரணை

இது குறித்து தகவலறிந்ததும் பொலிசார் விரைந்து சென்று மிருதுளாவின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத் தகராறு காரணமாக மிருதுளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.