நியூயார்க் அமெரிக்காவை நான்கு நாட்களாக துவம்சம் செய்து வரும் பனி சூறாவளிக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடும் பனிப்பொழிவால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன.
பனி சூறாவளியில் சிக்கி, நேற்று வரை 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பப்பல்லோ நகரில் வசித்த ஆண்டெல் டெய்லர், 22, என்ற பெண், சமீபத்தில் காரில் அலுவலகம் சென்ற போது நிலைமை சீராக இருந்தது.
ஆனால், வீடு திரும்புகையில் அவரது கார் பனிச்சூறாவளியில் சிக்கியது. தன் நிலை குறித்து, மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பினார். நிலைமை சீரடைந்தவுடன் வீடு திரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், காருக்குள் 18 மணி நேரம் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. பனி சூறாவளியில் உயிரிழந்த ஆண்டெல் டெய்லர், வரும் ஜனவரியில் தன் 23வது பிறந்த நாளை கொண்டாட இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement