சண்டிகர்: பஞ்சாப் எல்லைப்பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 3 டிரோன்களை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.40மணியளவில் அமிர்தசரசில் சர்வதேச எல்லை அருகே இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் டிரோன் நுழைந்தது. இதன் மீது வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்நிலையில் ராஜாடால் கிராமத்தில் டிரோன் விழுந்து கிடந்தது. டிரோனை பறிமுதல் செய்த வீரர்கள் அதில் இருந்து எதுவும் வீசப்பட்டதா என சோதனை நடத்தி வருகின்றனர்.
