பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்துடன் சென்ற கார் கர்நாடகாவில் விபத்து

பிரதமர் நரந்தர மோடியின் சகோதரனான பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் இன்று மதியம் மைசூரில் பயணம் செய்த காரில் விபத்தினை சந்தித்தனர். அப்பொழுது காரில் ஐந்து பேர் இருந்தனர். மதியம் 1:30 மணிக்கு அளவில் மைசூரு – சாமராஜநகர் இடையே செல்லும்பொழுது இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. 
பிரஹலாத் மோடி உட்பட காரில் ஐந்து பேர் இருந்தனர். விபத்தை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும்  முதலுதவி மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. பிரஹலாத் மோடியின் பேரனுக்குத் தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. 
image
காரில் இருந்த 5 பேர் – பிரஹலாத் மோடி, அவரது மகன் மெகுல் மோடி, மருமகள்,பேரன் மேனத் மெகுல் மோடி மற்றும் அவர்களது ஓட்டுநர் சத்தியநாராயணன். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
சுஹைல் பாஷாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.