டெல்லி: பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தலைநகர் டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று முற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். […]
