பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் கொல்லப்பட்ட இளம் பெண்: இருவர் கைது


பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று வாலசே பகுதியில் உள்ள பப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லே எட்வர்ட்ஸ் என்ற இளம் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் ஈவ்வில் துப்பாக்கி சூடு

பிரித்தானியாவின் விர்ரலின்(Wirral) உள்ள வாலேசி (Wallasey)கிராமத்தில் இருக்கும் லைட் ஹவுஸ் விடுதியில் கிறிஸ்துமஸ் தினத்தின் முந்தைய நாள் இரவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று அரங்கேறி இருந்தது.

இரவு 11.50 மணிக்கு பிறகு நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அழகுக்கலை கலைஞர் எல்லே எட்வர்ட்ஸ் என்ற பெண் ஒருவரும், மூன்று ஆண்களும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் கொல்லப்பட்ட இளம் பெண்: இருவர் கைது | Uk Wallasey Pub Shooting Elle Edwards KilledElle Edwards- எல்லே எட்வர்ட்ஸ்(FAMILY HANDOUT)

ஆனால் தலையில் சுடப்பட்ட எல்லே எட்வர்ட்ஸ் என்ற 26 வயது இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்து இருந்தனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பதாகவும் பொலிஸார் தகவல் அளித்து இருந்தனர். 

இருவர் அடுத்தடுத்து கைது

கிறிஸ்துமஸ் தினத்திற்கு சற்று முன்பு இளைஞர்கள் நிறைந்த ஒரு பரபரப்பான இடத்தில் நடந்துள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக துப்பறியும் கண்காணிப்பாளர் டேவ் மெக்காக்ரியன் குறிப்பிட்டு இருந்தார்.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் ஈவ்வில் கொல்லப்பட்ட இளம் பெண்: இருவர் கைது | Uk Wallasey Pub Shooting Elle Edwards KilledSky News

இதையடுத்து துப்பாக்கி சூடு நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, துப்பாக்கி ஏந்தியவர் ஒருவர் அடர் வண்ண மெர்சிடிஸ் வாகனத்தில் பப் கார் நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்திய பொலிஸார், சிசிடிவி ஆதாரத்துடன் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய நபர் ஒருவர் டிரான்மேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் ராக் ஃபெர்ரியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கொலைக்கு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.