வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலரான (திட்டம்) கோபி, கடந்த சனிக்கிழமை மதியம் போதையில் தள்ளாடியபடி அலுவலகம் வந்து கணினி அறையில் இருந்த 2 பெண் ஊழியர்கள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் வீதிக்கு ஓடி வந்தனர். அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபியை கடுமையா எச்சரித்தனர். இப்பிரச்னை குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரித்து பிடிஓ கோபியை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
